உழைப்போம்

Friday, November 29, 2013

TECHNICAL ASSISTANT/ELECTRICAL& MECHANICAL DIRECT RECRUITMENT THROUGH EMPLOYMENT EXCHANGE AND APPRENTICESHIP CANDIDATES IN TANGEDCO LTD

TECHNICAL ASSISTANT/ELECTRICAL& MECHANICAL DIRECT RECRUITMENT THROUGH EMPLOYMENT EXCHANGE AND APPRENTICESHIP CANDIDATES IN TANGEDCO LTD
ELECTRICAL:
SL.NO CENTRE DOWNLOAD
 1.
 CHENNAI
 List by Employment Exchange
 2.
 COIMBATORE
 List by Employment Exchange
3.
 CUDDALORE
 List by Employment Exchange
4.
DHARMAPURI
List by Employment Exchange
5.
ERODE
List by Employment Exchange
6.
KANYAKUMARI
List by Employment Exchange
7.
MADURAI
List by Employment Exchange
8.
THANJAVUR
List by Employment Exchange
9.
THENI
List by Employment Exchange
10.
THIRUVANNAMALAIList by Employment Exchange
11.
TIRUNELVELI
List by Employment Exchange
12.
TRICHY
List by Employment Exchange
13.
VELLORE
List by Employment Exchange
14.
VILLUPURAM
List by Employment Exchange
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

Monday, November 25, 2013

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடு.

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி  மூப்பு  பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் 20.12.2013 குள் தங்கள் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளர்கள்.

view in word doc.                  Download in word doc

View in seniority List             Download in Seniority List

Friday, November 22, 2013

கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் மற்றும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நெய்வேலி புதிய மின் நிலைய பணிகளை முடிக்க மத்திய மின்சார ஆணையம் காலக்கெடு-தி இந்து செய்தி

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்படும், 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையப் பணிகளை கோடை காலத்திற்குள் முடிக்குமாறு, தமிழக மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, November 12, 2013

முகரம் பண்டிகை விடுமுறை தேதி - மின் வாரிய ஆணை வெளியிடப்பட்டது.

 மின் வாரிய ஆணை படிக்க  பதிவிறக்கம் செய்ய

புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது

புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது . வாரிய ஆணையை
படிக்க    பதிவிறக்கம் செய்ய

மின்சார வாரியத்தில் முதல் முறையாகதொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை-தினமலர் செய்தி

மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, மின்சார வாரியத்தில், முதல் முறையாக, தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஊழியர்கள் நலன், பதவி உயர்வு, பணி நியமனம், பணி நிலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையீடு செய்து வருகின்றனர்.

WAGE REVISION COMMITTEE'S REVISED PROPOSAL ON WORK NORMS

Monday, November 11, 2013

மொஹரம் விடுமுறை தேதி மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று மொஹரம். இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
                            ஆனால், பிறை தென்படாத காரணத்தினால் நவம்பர் 15ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மொஹரம் பண்டிகை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்துள்ளது.

Thursday, November 7, 2013

மின் வாரியத்தில் 6,000 பேர் நியமனம் - தின மலர் செய்தி.

மின்சார வாரியத்தில், புதிதாக, 6,000 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான நபர்கள், நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் விரைவில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு, மின் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதில், தொடர் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 275 உதவி பொறியாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, 6,275 பணி இடங்கள், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நிரப்ப, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெறப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படை யில், தகுதியான நபரை, நேர்காணலுக்கு அழைக்க, விரைவில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. மின்சார வாரியத்தில், 'அப்ரென்டிஸ்ஷிப்' பயிற்சி முடித்தவர்கள், நேர்காணலில் பங்கேற்க, நேரடியாக அழைப்பு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலைகளை, ஒருவர் செய்ய வேண்டியுள்ளது. நடப்பாண்டில், 'அப்ரென்டிஸ்ஷிப்' முடித்த பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்களையும், நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்' என்றனர்.

'பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்':

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி, கூடுதல் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தான், புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, அமைச்சர், அமைச்சர் உதவியாளர், எம்.எல்.ஏ., அவரின் உதவியாளர், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகரகள் என, யாரிடமும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது, 'பணம் கொடுங்கள்; வேலை வாங்கி தருகிறேன்' என்று சொன்னால், முதல்வர் தனி பிரிவில் புகார் செய்யுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, November 2, 2013

தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் 
ஒளிர்வதைக் கண்டு 
தீய 
எண்ணங்கள் மறையட்டும்.! 

உறவுகள் 
கூடி மகிழ்வதைக் கண்டு 
உள்ளத்தில் 
உற்சாகம் பெருகட்டும்.! 

இனிப்புகள் 
உண்பதைக் கண்டு 
இன்று போல் 
இன்பங்கள் நிலைக்கட்டும்! 

பண்டிகை 
திருநாளில் பகை மறந்து 
பந்த பாசங்கள் 
பசுமையாய் வளரட்டும்.! 

சகல 
சந்தோசமும் ஒன்று கூடி 
சமத்துவம் மலர்ந்து 
சகோதரத்துவம் உண்டாகட்டும்.! 


(நன்றி   எழுத்து .காம் )