உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Tuesday, October 22, 2013
இந்தியாவில் மின் இணைப்பு பெற 67 நாட்கள் ஆகின்றது: உலக வங்கி ஆய்வில் தகவல். மலை மலர் செய்தி
இந்தியாவில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு 67 நாட்களாகின்றது என்று உலக வங்கி தங்களுடைய வர்த்தகம் குறித்த 2013 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில்
மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்-திருப்பூர் கோட்ட பொறியாளர்.(தினமலர் செய்தி )
திருப்பூர் மின் கோட்டத்தில், 2.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. பழைய முறையில் மின் கட்டணம் "ரீடிங்' எடுக்கும் தேதி, மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி ஒரே மாதிரியாக இருந்தது. மாதத்தின் முதல் தேதியில் இருந்து 15ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தப் பட்டது. தற்போது, மின் உபயோகம் குறித்து "ரீடிங்' எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை உள்ளது.
மின் பணியாளர்கள் வரும்போது, உரிமையாளர்கள் இல்லாதது, பணி பளு காரணங்களால் பெரும்பாலானோருக்கு மின் உபயோக "ரீடிங்' எடுக்கப்படுவது, செலுத்த வேண்டிய கடைசி தேதி தெரிவதில்லை. அபராதம், மின் துண்டிப்பு போன்ற சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியம் சார்பில் எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வசதி வேண்டுவோர், மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் போன் எண், லேன்ட் லைன் எண்களை பதிவு செய்தால், மின் கட்டணம், கடைசி தேதி குறித்து, "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., வரும்.கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
மின் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, பிரிவு அலுவலகங்கள், மின் கட்டணம் செலுத்தும் அலுவலங்கங்கள், இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண், மொபைல் போன் அல்லது லேன்ட் லைன் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தங்களது தொடர்பு எண்களை, மின் நுகர்வோர் பதிவு செய்ததும், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனவே, மின் நுகர்வோர் 10 நாட்களுக்குள், தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts
(
Atom
)