உழைப்போம்

Thursday, October 31, 2013

மின் கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்தி : மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் குறித்து மின் நுகர்வோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை மின் வாரியம் அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய பொறியாளர் சின்னதம்பி கூறியது:
ஊத்தங்கரை மின் வாரியம் மூலம் பயன் பெறும் நுகர்வோர்கள் தங்கள் வீடு, கடைகளில் பயன்படுத்திய மின் அளவு, கட்டணம் செலுத்தும் தேதி ஆகியவை குறித்து அவர்களின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
இந்த வசதியை அனைத்து நுகர்வோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.