உழைப்போம்

Saturday, November 2, 2013

தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் 
ஒளிர்வதைக் கண்டு 
தீய 
எண்ணங்கள் மறையட்டும்.! 

உறவுகள் 
கூடி மகிழ்வதைக் கண்டு 
உள்ளத்தில் 
உற்சாகம் பெருகட்டும்.! 

இனிப்புகள் 
உண்பதைக் கண்டு 
இன்று போல் 
இன்பங்கள் நிலைக்கட்டும்! 

பண்டிகை 
திருநாளில் பகை மறந்து 
பந்த பாசங்கள் 
பசுமையாய் வளரட்டும்.! 

சகல 
சந்தோசமும் ஒன்று கூடி 
சமத்துவம் மலர்ந்து 
சகோதரத்துவம் உண்டாகட்டும்.! 


(நன்றி   எழுத்து .காம் )