திண்டுக்கல் மாவட்டம்,வத்தலகுண்டு கோட்டத்தில் இன்று ( செப்டம்பர் 17) கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதீய மின் தொழிலாளர் சம்மேனத்தின் சார்பாக கொடி ஏற்றப்பட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
வத்தலகுண்டு கோட்ட தலைவர் திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். வத்தலகுண்டு கோட்ட செயலாளர் சரவணகுமார் அவர்கள் வரவேற்று பேசினார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி வைத்து பேசினார். வத்தலகுண்டு செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.