உழைப்போம்

Tuesday, October 22, 2013

இந்தியாவில் மின் இணைப்பு பெற 67 நாட்கள் ஆகின்றது: உலக வங்கி ஆய்வில் தகவல். மலை மலர் செய்தி

இந்தியாவில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கு 67 நாட்களாகின்றது என்று உலக வங்கி தங்களுடைய வர்த்தகம் குறித்த 2013 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில்
வெளியிட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயகம் என்று கருதப்படும் இந்தியா கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தர வரிசையில் 99ஆவது இடத்தில் இருந்துள்ளது. 

தற்போது இந்த ஆண்டுக்கான அறிக்கையின்படி 105ஆவது இடத்தைப் பெறுகின்றது. அமெரிக்காவில் இன்னும் ஒருநாள் அதிகரிப்பதன் காரணமாக அந்த நாடு 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 67 நாட்களிலும் பரவலாக ஏழு விதமான விண்ணப்பங்களை மக்கள் நிரப்பித்தர வேண்டியுள்ளது. 


இந்த நாட்களிலும் மீட்டர் பாதுகாப்பு வைப்பு சமர்ப்பித்தல், வெளிப்புற வயரிங் இணைப்பு போன்றவற்றிக்கு அதிக நாட்கள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவில் ஒரு சராசரி மின் இணைப்பிற்கு ஆகும் செலவு 1,76,444 ஆகும் என்று உலக வங்கிக் கணக்கீடு தெரிவிக்கின்றது. 


வீட்டு மின் இணைப்பு கொடுக்கும் வரிசையில் ஐஸ்லாந்து 17 நாட்களில் முதலிடத்திலும், 22 நாட்களில் இணைப்பு கொடுப்பதன் மூலம் ஜெர்மனி இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆசிய நாடுகளிலும், பாகிஸ்தான்(206 நாட்கள்), இலங்கை(132 நாட்கள்) தவிர்த்து மற்ற நாடுகளுடன் இந்தியா பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 


கடந்த 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்னமும் 43 சதவிகித மக்கள் வெளிச்சம் பெற மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர்.அதே கணக்கீடானது இந்தியாவில் இன்னமும் மின்சார இணைப்பு பெறாத குடும்பங்கள் 11 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகத் தெரிவிக்கின்றது.

No comments :

Post a Comment