உழைப்போம்

Saturday, December 28, 2013

சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக புதிதாக 3 துணை மின் நிலையங்கள்- தி இந்து

மெட்ரோ ரயில் இயக்கத்துக்காகவும் வடசென்னை புதிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவும் சென்னையில் 3 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகருக்கு தினமும் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் முடிவுக்கு வந்து, முதல்கட்டமாக வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கம், பணிமனை மற்றும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கூடப் பணிகள் ஆகியவற்றுக்கு தினமும் 300 முதல் 800 மெகாவாட் வரை கூடுதலாக மின்சாரம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலா 600 மெகாவாட் திறனுடன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட 1,200 மெகாவாட் மின் நிலையம், விரைவில் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது. தற்போது இந்த மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக விநியோகிக்கவும், மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தேவைப்படும் அதிக மின்சாரத்தை வழங்கவும் சென்னை நகரில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின்னூட்டி பாதைகள் தேவைப்படுகின்றன.

மேட்டூர் புதிய அனல்மின் நிலையம் மீண்டும் செயல்பட தொடக்கம்

600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.