உழைப்போம்

Tuesday, November 12, 2013

மின்சார வாரியத்தில் முதல் முறையாகதொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை-தினமலர் செய்தி

மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, மின்சார வாரியத்தில், முதல் முறையாக, தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஊழியர்கள் நலன், பதவி உயர்வு, பணி நியமனம், பணி நிலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையீடு செய்து வருகின்றனர்.

ஊழியர் கோரிக்கைகளை பரிசீலித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க, முதல் முறையாக, ஒரு நாளைக்கு மூன்று தொழிற்சங்கங்கள் என, கடந்த, 6ம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 13ம் தேதி வரை, தொடர் பேச்சுவார்த்தை நடக்கும். இதில், மின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்சார அண்ணா தொழிற்சங்கம், பொறியாளர் சங்கம், பொறியாளர் கழகம் உள்ளிட்ட, 15 அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன.

இதுகுறித்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "மின் வாரியம் சார்பில், மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசுவர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை' என்றனர்.

No comments :

Post a Comment