உழைப்போம்

Friday, October 25, 2013

100 மையங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரங்கள்-தின மணி செய்தி.

தமிழகம் முழுவதும் 100 மையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் (ATPM-Any Time Payment Machine) அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

பேரவையில் அதிமுக உறுப்பினர் எம்.கே.அசோக் (வேளச்சேரி) எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்:
முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல்படி 100 மையங்களில் இந்த எந்திரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மின் கட்ட வசூல் எந்திரம் உள்பட 24 இடங்களில் மின் கட்டண எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களில் மின் கட்டணத்தை எளிதாகச் செலுத்த முடியும்.
இதன் மூலம் 32 ஆயிரம் நுகர்வோர் பலன் அடைந்து வருகின்றனர். 76 எந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை தவிர வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகரங்களிலும் இதுபோன்ற எந்திரங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

No comments :

Post a Comment