உழைப்போம்

Saturday, October 19, 2013

மின் நுகர்வோர் மன்றத்துக்கு குறைகளை அனுப்ப அறிவுரை (தினமலர் செய்தி.)

விருதுநகர் மின் மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறியதாவது: மின்சார வாரியத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் குணசேகரன் உத்தரவுப்படி,நுகர்வோர் குறைதீர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இம்மன்றம், விருதுநகரில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, குறைகளை நிவர்த்தி
செய்கிறது. இதனிடையே, நுகர்வோரிடமிருந்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு, குறைபாடுகள் குறித்த கடிதங்கள் அதிகளவில் செல்கின்றன. இதன் மீது, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆதலால், இது போன்ற குறைபாடு கடிதங்களை,வட்டார மின் அலுவலகத்தில் உள்ள, நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு அனுப்பலாம். இதற்காக, ஒவ்வொரு மின் வட்டத்திலும்,மின்வட்ட மேற்பார்வை பொறியாளரை தலைவராக கொண்ட, நுகர்வோர் குø றதீர் மன்ற குழு செயல்படுகிறது. இதில், அலுவல் சாராத இரு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் கலெக்டாரல் நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு வழங்கப்படும் குறைபாடு மனுவுக்கு,மனுவை பெற்றதற்கான ஒப்பகையும் வழங்கப்படும். இரண்டு மாதத்தில், பிரச்னை தீர்க்கபடாடிவிடில், சென்னை மின்சார ஒழுங்கு முறை ஆணைய அலுவலக மின் துறை தீர்ப்பாளருக்கு, மேல்முறையீடு செய்யலாம். இது தெடர்பான விபரங்கள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகஇணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன, என்றார்.

No comments :

Post a Comment