உழைப்போம்

Sunday, October 20, 2013

எஸ்.எம்.எஸ். மூலம் மின்சாரக் கட்டணம். (தினமணி செய்தி.)

மின்நுகர்வோர் தங்களது புகார்களை வட்டார அளவில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின் நுகர்வோரிடம் இருந்து மின்கட்டண
கணக்கெடுப்பு, புதிய மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம், குறைபாடுடைய மின்னளவிகள் போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் வருகின்றன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இத்தகைய பொருள்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே புகார் மனுக்களை தங்கள் பகுதியில் உள்ள வட்டார மின்சார அலுவலகத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு மின்நுகர்வோர் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.

எஸ்.எம்.எஸ். மின்கட்டணம்:எஸ்.எம்.எஸ். மூலம் மின்சாரக் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ள மின் நுகர்வோர் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்யும் மின்நுகர்வோர் அனைவருக்கும் மதிப்புக் கூட்டு சேவையாக குறுஞ்செய்தி மூலம் அவரவர் மின் கட்டணம், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
எனவே மின்நுகர்வோர் அனைவரும் இந்த வசதியைப் பெற அந்தந்த பிரிவு அலுவலகங்களுக்குச் சென்று தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment