உழைப்போம்

Thursday, October 24, 2013

மின் விபத்துக்களை தவிர்க்கமின் வாரியம் எச்சரிக்கை.- தினமலர் செய்தி.

 பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. பருவமழை காலங்களின் போது வீசும் காற்றினால் மரங்கள் விழுவது உள்ளிட்ட பல்வேறு 

காரணங்களால் மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்து கூடிய வாய்ப்புள்ளது.அப்போது, பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் கவனக்குறைவாக மின் சாதனங்களை பயன்படுத்துவதால் மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பருவமழைக் காலங்களில் மின்விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் மின் கம்பங்களில் இருந்து தரையில் கிடக்கும் மின் ஒயர்களை தொடமல் இருக்க வேண்டும்.மின்சாரம் தொடர்பான சாதனங்களை தன்னிச்சையாக செயல்படுத்தாமல் அருகில் மின் வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் பொது பொதுமக்கள், "டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், டெலிஃபோன் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டாம்.ஈரமான நிலையில் மின்சாதன பொருட்கள் மற்றும் பிளாக்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். மழை காலங்களில் 
டிரான்ஸ்ஃபார்ம், மின்கம்பம் உள்ளிட்டவை அருகில் பொதுமக்கள் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.பருவ மழைக்காலத்தில் தர்மபுரி மின்பகிர்மான வட்டத்தில் மின் பிரச்னைகள் ஏற்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்களும் எடுக்கவும், மின்தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சீரமைக்க அனைத்து பொறியாளர்கள், பணியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மின்பகிர்மான வட்டத்தில் பருவமழையின் போது ஏற்படும் மின்தடை, மின்கம்பங்கள், ஒயர்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து தர்மபுரி, கடத்தூர், பாலக்கோடு, அரூர் கோட்ட செயற்பொறியாளர்களை, 9445855411, 9445855549, 9445855525, 9445855491 என்ற மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும்.
தகவல்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை பொதுமக்கள் உறுதி செய்ய, மின் பிரச்னை ஏற்பட்டுள்ள பகுதிக்கு உட்பட செயல்அலுவலரை தொடர்பு கொண்டு, மின்விபத்து இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்.

No comments :

Post a Comment